1.தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதீர
பாரத மண்ணில் அமைதி போனதே
பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக
பாரம் போர்களம் போல் ஆனதே
2.கார்மேகக் கூட்டம் எல்லாம்
மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும்
பண்பாடும் குயிலின் இனமும்
காசு வாங்கியா அழகாய் கூவும்
3.மலர் கூட்டம், வேண்டிய மனிதர்
என்று பார்த்திட்டா மணத்தை வீசும்
மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன்
விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும்
4.அன்பு தேவை அன்பு தேவை
அன்பு தெய்வத்தின் அனுபவம் தேவை
அன்பின் தெய்வம் இயேசு தெய்வம்
அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை
5.வந்தேமாதரம் சொல்லும்போது
தேசிய ஒற்றுமை ஓங்குமே
இயேசுவின் பாரதம் ஆகும்போது
அன்பும் அமைதியும் தங்குமே – அன்பு தேவை
6.பிழைப்புக்காக மக்கட்குள்ளே பிளவை
உண்டுபண்ணும் சிலரும்
பதவிக்காக பிறரின் நலனை
பலிகொடுக்கும் பாதகரும் – அன்பு தேவை
7.புகழுக்காக எதையும் செய்யும்
போலிக் கொள்கையோடு சிலரும்
உணரும் வரை இந்தியாவின்
ஒருமைப்பாடு கனவாய் இருக்கும் – அன்பு தேவை
8.மதங்கள் என்னும் பிரிவுகள் எல்லாம்
மனிதன் தந்த பெயர்கள் தானே
மனங்கள் அடையும் சுத்தம் ஒன்றே
இறைவன் வேண்டும் மாற்றம் இன்றே – அன்பு தேவை
9.உண்மையறியா பலரும் உண்டே
உணருவாயோ தேவ ஜனமே
இயேசு நாமம் அறிவிக்கவே
முன் செல்வாயோ இளைஞனே – அன்பு தேவை
thesaththin ellaiyengkum nasakar thollaidhara
baradha mannil amaithi ponathe
pethaiyar nammil silar bedhangkal pesab poka
baram porkalam pol aanathe
1.karmekak kudtam ellam
mannin niram barththa mazhaiyai kodukkum
panbadum kuyilin inamum
kasu vangkiya azhakay kuvum
2.malar kudtam, vendiya manidhar
endru barththidda manaththai veesum
manidhan mattum dharam biriththu een
viruppu veruppinai kaddita vendum
3.anbu thevai anbu thevai
anbu theyvaththin anupavam thevai
anbin theyvam iyesu theyvam
anukkirakam indre inththiyath thevai
4.vanththemadharam sollumpothu
thesiya orrumai oongkume
iyesuvin baradham aakumpothu
anbum amaithiyum dhangkume – anbu thevai
5.bizhaibbukkaka makkadkulle bilavai
undupannum silarum
padhavikkaka birarin nalanai
palikodukkum badhakarum – anbu thevai
6.bukazhukkaka ethaiyum seyyum
polik kolkaiyodu silarum
unarum varai inththiyavin
orumaibbadu kanavay irukkum – anbu thevai
7.madhangkal ennum birivukal ellam
manidhan dhanthdha beyarkal thane
manangkal adaiyum suthdham onre
iraivan vendum marram inre – anbu thevai
8.unmaiyariya palarum unde
unaruvayo theva janame
iyesu namam arivikkave
mun selvayo ilainjane – anbu thevai